உணர்வற்ற பிரதமர்: ராகுல்| Dinamalar

புதுடில்லி,:போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உணர்வின்றி, ஆணவத்துடன் நடந்து கொள்வதாக காங்., – எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது தன் தவறு தான் என ஒப்புக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பும் கோரி உள்ளார். எனவே போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்ததற்கு அவர் தான் பொறுப்பு.அப்படி இருக்கையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் கண்ணியமும், மனிதாபிமானமும் பிரதமரிடம் ஏன் இல்லை?
உயிரிழந்த 403 பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயை அம்மாநில அரசு அளித்துள்ளது. 152 பேரின் குடும்பத்தினருக்கு வேலை அளித்துள்ளது.போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் பட்டியலை பார்லி.,யில் தாக்கல் செய்ய உள்ளேன். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரின் வலியை புரிந்து கொள்ளாத அளவுக்கு பிரதமர் உணர்வற்றவராக உள்ளார். இந்த விவகாரத்தை ஆணவத்துடனும், கண்ணியமற்ற கோழைத்தனத்துடனும் அவர் கையாள்கிறார்.இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement

Source link

Leave a Comment