நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ராஜ்யசபாவில் தி.மு.க., மசோதா| Dinamalar

புதுடில்லி:லோக்சபாவில் நேற்று 153 தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., – எம்.பி., வில்சன், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரும் மசோதாவை ராஜ்ய சபாவில் தாக்கல் செய்தார்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் பொது விவகாரம் குறித்து தனிநபர் மசோதா தாக்கல் செய்வது வழக்கம். லோக்சபாவில் நேற்று, காங்., – எம்.பி., சசிதரூர், தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த மசோதாவை தாக்கல் செய்தார். அக்கட்சியின் மற்றொரு எம்.பி., மணீஷ் திவாரி, புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குறித்த மசோதாவை தாக்கல் செய்தார்.

பா.ஜ., – எம்.பி., ரமேஷ் பிதுரி, பாடத்திட்டங்களில் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்ற மசோதாவையும், தேசியவாத காங்., – எம்.பி., சுப்ரியா சுலே, ஊழியர்கள் வேலை நேரத்துக்கு பின் அலுவல் சார்ந்த போன் அழைப்புகள் மற்றும் ‘இ – மெயில்’ ஆகியவற்றுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்ற மசோதாவையும் தாக்கல் செய்தனர்.

லோக்சபாவில் நேற்று மட்டும் மொத்தம் 153 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டன.ராஜ்யசபாவில் தி.மு.க., – எம்.பி., வில்சன், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.

Advertisement

Source link

Leave a Comment